'ஒமைக்ரான்' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணியருக்கு, ரத்த மாதிரி எடுத்து, 'ரேபிட்' பரிசோதனை செய்யும் வசதி, சென்னை விமான நிலையத்தில் துவக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் உருமாறிய வைரசான, ஒமைக்ரான் பரவலை தடுக்க, தென் ஆப்ரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், சிங்கப்பூர் உட்பட 12 நாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வரும் விமான பயணியரிடம், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை நடத்த, மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
சோதனை முடிவுகள் வரும் வரை, அந்த பயணியரை விமான நிலையத்திலேயே காத்திருக்க வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை மேற்பார்வையிட, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ஒவ்வொரு விமான நிலையத்திலும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நடைமுறை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நேற்று முன்தினம்
அமலுக்கு வந்தது. ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை முடிவுகள் வர ஆறு மணி நேரம் பிடிக்கும். அந்த ஆறு மணி நேரமும், பயணியரை விமான நிலையத்தில் தனிமைப்
படுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வரும் பயணியருக்கு, ரத்த மாதிரி எடுத்து, 'ரேபிட்' பரிசோதனை செய்யும் வசதியும், விமான நிலையத்தில் துவக்கப்
பட்டுள்ளது.
இந்த சோதனை மேற்கொள்ள, 3,400 ரூபாய் கட்டணம்; முடிவுகள் 45 நிமிடங்களில் வழங்கப்படும். பயணியரின் கோரிக்கைக்கு ஏற்ப, ரேபிட் பரிசோதனை வசதி, சென்னை விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வருகை பகுதியில்
செய்யப்பட்டுள்ளது. சாதாரண ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை மேற்கொள்ள, 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.