பேப்பர் ரூபத்தில் தங்கம்.. சூப்பரா சம்பாதிக்கலாம்!
28 Nov,2021
Advt : எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி!
தங்கப் பத்திரங்களின் (Sovereign Gold Bonds) எட்டாம் கட்ட விற்பனை நாளை (நவம்பர் 29) தொடங்குகிறது. மத்திய அரசு சார்பில் தங்கப் பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்கிறது. தங்கப் பத்திரத்தின் மதிப்பு கிராமுக்கு 4,791 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் தங்கப் பத்திரம் வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், பங்குச் சந்தைகள், தபால் அலுவலகங்கள் மூலம் தங்கப் பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்.
டிசம்பர் 7 ஆம் தேதி தங்கப் பத்திர விற்பனை முடிவடைகிறது. நிஜத் தங்கமாக வாங்காமல் காகித முறையில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு தங்கப் பத்திரம் ஒரு சூப்பர் திட்டம். குறைந்தபட்சம் ஒரு கிராமுக்கு தங்கப் பத்திரம் வாங்க வேண்டும். அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம்.
தங்கத்தின் மதிப்பு உயர உயர தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். இதுபோக ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானமும் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், தங்கப் பத்திரங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்பது இத்திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி.
தங்க நகையாக வாங்கும்போது செய்கூலி செலுத்துகிறோம். ஆனால், தங்கப் பத்திரத்தில் அந்தப் பிரச்சினையும் இல்லை. ஆக, நிஜத் தங்கத்தை வாங்காமலேயே தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பெற விரும்புவோர் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.