வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்; எப்படி?
27 Nov,2021
2021ல் அதிக டி20 போட்டிகள் வென்ற அணியில் இந்தியாவிற்கு 7வது இடம்!
வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்; எப்படி?
புதுடெல்லி: வங்கி இருந்தாலும் அதில் பணம் இல்லாவிட்டாலும் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆனால் இதற்கு நீங்கள் ஜன்தன் கணக்கு வைத்திருக்க வேண்டும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின் கீழ் நீங்கள் கணக்கைத் திறக்கவில்லை என்றால், அதை இப்போதே திறக்கவும். ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், வங்கி கணக்குகள் பூஜ்ஜிய இருப்பில் (Zero Balance Account) திறக்கப்படுகின்றன. மத்திய அரசின் இந்த திட்டம் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 41 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் காப்பீடு உள்ளிட்ட பல வகையான வசதிகள் உள்ளன. இந்த வசதிகளில் ஒன்று ஓவர் டிராஃப்ட். அதைப் பற்றி பார்ப்போம்.
10 ஆயிரம் ரூபாய் எப்படி கிடைக்கும்
ஜன்தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தின் கீழ், உங்கள் கணக்கில் இருப்பு இல்லாவிட்டாலும், 10,000 ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவீர்கள். இந்த வசதி குறுகிய கால கடன் போன்றது. முன்பு இந்த தொகை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது அதை 10 ஆயிரமாக அரசு உயர்த்தியுள்ளது. இந்தக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதிக்கான அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற, உங்கள் ஜன்தன் கணக்கு குறைந்தது 6 மாதங்கள் பழமையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், 2,000 ரூபாய் வரை மட்டுமே ஓவர் டிராஃப்ட் கிடைக்கும்.