அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள்: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
19 Nov,2021
அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தமிழகத்தின் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்து 9 பேர் அவுஸ்திரேலியா நாட்டிற்கு செல்வதற்காக திருவாடானை அருகே ஓரியூரில் உள்ள வாடகை கட்டடத்தில் தங்கியிருந்தனர்.
அங்கிருந்து டிராவல்ஸ் ஏஜென்ட் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல முயன்றதாக அவர்களை ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிசார் கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடந்தது.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட தாசன், மகேந்திரன், டேனியல், நேசகாந்தன், டேவிட்ராஜன், ராஜேந்திரன், சிவராஜா, சிவகுமார் ஆகிய அனைவரையும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மாஜிஸ்திரேட் முல்லை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.