ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 48 காசுகள்: எந்த நாடு தெரியுமா?
03 Nov,2021
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. இடையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சற்று குறைந்து இருந்த நிலையில், அதன் பிறகு மீண்டும் உச்சத்தில் பயணிக்க தொடங்கியது. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உலகிலேயே குறைந்த விலையாக வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு (இந்திய மதிப்பில்) விற்கப்படுகிறது என்றால் அது ஆச்சர்யமாகவே உள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.200 க்கு விற்கப்படுகிறது . நெதர்லாந்தில் ரூ . 172 ஆகவும் , நார்வேவில் ரூ .170 ஆகவும் , டென்மார்க்கில் ரூ .162 ஆகவும் விற்பனையாகிறது .
ஆசிய அளவில் பார்த்தால் , இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் ரூ . 93 ஆகவும் , சீனாவில் ரூ . 84 ஆகவும் , வங்கதேசத்தில் ரூ . 77 ஆகவும் , இந்தோனேஷியாவில் ரூ . 60 ஆகவும் , இலங்கையில் ரூ . 68 ஆகவும் , பாகிஸ்தானில் ரூ . 59 ஆகவும் , மலேசியாவில் ரூ . 37 ஆகவும் உள்ளது.
அதே வேளையில் உலகிலேயே மிக குறைவாக 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 1.48 க்கு வெனிசுலா நாட்டில் விற்கப்படுகிறது . ஈரானில் 5 ரூபாய்க்கும் சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது . மேலும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.50 க்கும் கீழே உள்ளது .
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் எப்போதும் பெட்ரோலிய பொருட்கள் குறைவாகவே இருந்து வருகிறது.
இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக உள்ளது. ஆனால் மத்திய அரசின் அதிக வரி விதிப்பே பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.