சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.,30 வரை தடை நீட்டிப்பு
30 Oct,2021
நம் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சர்வதேச விமான இயக்கத்துக்கான தடை நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூடான் மற்றும் பிரான்ஸ் உட்பட 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் கூடிய சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தடை சரக்கு விமாங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.