மோடி அரசின் அடுத்த டார்கெட்.. 13 விமான நிலையம் விற்பனை..
27 Oct,2021
ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு டாடா குழுமத்திற்கு வெற்றிகரமாக 18,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வெற்றி அடைந்த நிலையில் அடுத்த பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது மத்திய அரசு. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு சுமார் 13 விமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் செய்ய வேண்டும்
என்ற முக்கியமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. by Taboola வாயால் கெட்ட ஜாக் மா.. ஓரே வருடத்தில் 344 பில்லியன் டாலர் ஹோகயா..! ஆதார் கார்டில் மோசமாக உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற வேண்டுமா..? இதை செய்யுங்கள் ஏர் இந்தியா-க்கு போட்டியாக ஆகாஷ் ஏர்லையன்ஸ்.. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு ஓகே சொன்ன அரசு..! 13 விமான நிலையம் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் தலைவரான சஞ்சீவ் குமார் கூறுகையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு 13 விமான நிலையத்தை PPP (public-private partnership)
திட்டத்தின் கீழ் ஏலம் விட அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். மேலும் இந்த ஏலத்தை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் செய்ய முடிவு செய்துள்ளதாகச் சஞ்சீவ் தெரிவித்துள்ளார். பயணி - வருமானம் மேலும் இந்த 13 விமான நிலையத்தின் ஏலத்தை ஒரு பயணிக்குக் கிடைக்கும் சராசரி வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்த உள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தலைவர் சஞ்சீவ் குமார் கூறியுள்ளார். இதே முறையின் கீழ் தான் நொய்டாவில் இருக்கும் ஜீவார் விமான நிலையம் ஏலம் விடப்பட்டது.
50 வருட குத்தகை வழக்கம் போல் இந்த 13 விமான நிலையங்களை 50 வருடக் குத்தகை அடிப்படையில் தான் செயல்படுத்த உள்ளது. மேலும் தற்போது விற்பனை செய்யப்படும் 13 விமான நிலையத்தில் 6 பெரிய விமான நிலையங்கள் உடன் 7 சிறிய விமான நிலையங்களை இணைத்து ஏலம் விடப்பட உள்ளது. தேசிய பணமாக்கல் திட்டம் மத்திய அரசின் NMP திட்டம் அதாவது தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 25 விமான நிலையங்களை அடுத்த 4 வருடத்தில் நீண்ட காலக் குத்தகை ஒப்பந்தம் மூலம் தனியார்மயமாக்கல்
செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதானி குழுமம் இந்த 25 விமான நிலையத்தில் தற்போது மத்திய விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 13 விமான நிலையங்களும் உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நாட்டின் 6 பெரிய விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு அளித்துள்ளது. AAI நஷ்டம் கொரோனா காலத்தில் விமானச் சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 2021 நிதியாண்டில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சுமார் 1,962 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது, இதனால் இதைச் சமாளிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் 1,500 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளது.