பேரறிவாளனுக்கு மீண்டும் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!
26 Oct,2021
பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த 5 மாதங்களாக பரோலில் வெளியே இருந்தார்.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெறவேண்டும் என்று கூறி பேரறிவாளனுக்கு பரோலில் விடுப்பு வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்தே அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
கடந்த 150 நாட்களில் வெளியில் இருந்த பேரறிவாளனின் பரோல் காலம் இன்றுடன் முடிந்தது. இந்த நிலையில் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.