அமெரிக்காவில் இந்திய உணவகம் மீது தாக்குதல்: எப்.பி.ஐ விசாரணை
19 Oct,2021
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரில் இந்திய உணவகம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரணை நடத்த உள்ளது.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நியூமெக்ஸிகோ மாகாணத்தின் சான்டா பெ நகரில் உள்ள உணவகம் ஒன்றை, பல்ஜித் சிங் என்பவர் வாங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர், பல்ஜோத் சிங் நடத்தினார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், உணவக பெயரை பெயின்ட் மூலம் அழித்து டிரம்ப் 2020 என எழுதினர். மேலும், உரிமையாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையிலும் கருத்துகளை எழுதியுள்ளனர். இதனால் 1 லட்சம் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
இதனையடுத்து சான்டா பெ நகர போலீசார், இந்தியர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டும் குற்றமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்யவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கை எப்.பி.ஐ விசாரணை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், குற்றவாளிகளை நீதியின் முன்னாள் நிறுதத் உறுதிபூண்டுள்ளோம். போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் ஈடுபடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.