இந்த ஆண்டு கேரளாவில் பெய்து வரும் கனமழை வழக்கத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவின் ஐந்து மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ. தெற்கு கடற்படை கட்டளை (Southern Naval Command – SNC ), உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவ தயாராக உள்ளது. வானிலை விமானச் செயல்பாடுகளுக்கு சாதகமாக அமைந்தவுடன் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தத் தயாராக உள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பதிவாகும் நிலையில், ஐந்து மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை, ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் கேரளாவின் இரண்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) விடுத்துள்ளது.
இந்நிலையில் மிகவும் துயரத்தை ஏற்படுத்தும் சம்பவமாக, ஒரு குடும்பத்தில், மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் வசித்து வந்த நிலையில், மழை ஏற்படுத்திய பேரழிவில், அவர்கள் அனிவரும் வெள்ளத்தில் அடித்து செல்லபப்ட்டுள்ளனர். குடும்பத்தை சேர்ந்த பாட்டி, தந்தை, தாய் மற்றும் மூன்று பெண்கள் என அனைவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அந்தக் குடும்பம் கோட்டயம், கோட்டிக்கில் உள்ள ஒரு இடமான காவலியில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் வசித்து வந்தது. அங்கு சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மார்ட்டின் என்பவரது வீடு முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது, அதனுடன் குடும்பத்தில் உள்ள ஆறு பேரும் அடித்து செல்லப்பட்டனர். இறந்தவர்களின் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிளாராம்மா ஜோசப் (65), அவரது மகன் மார்ட்டின் (48), அவரது மனைவி சினி (37), அவர்களின் பெண்கள் சோனா (11), சினேகா (13) மற்றும் சாண்ட்ரா (9) ஆகியோர் வீட்டில் இருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் கிளாரம்மா, சீனி மற்றும் சோனா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மார்ட்டினின் குடும்பத்தைத் தவிர, வேறு நான்கு பேரும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவில் அடைமழை பெய்து வருகிறது. இடை விடாமல் பெய்து வரும் அடைமழையினால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.