பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி
19 Oct,2021
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது.
வர்த்தக வங்கிகளின் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையளித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கை ஆய்வு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த பதிலின்படி, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு அது இணங்காதது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
இந்த தகவலை அறிக்கை ஒன்றில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.