எது பயங்கரவாதம்? வரையறைதான் என்ன? அதை முதலில் சொல்லுங்க...காங். புகாருக்கு சீமான் பதிலடி
13 Oct,2021
பயங்கரவாதம் என்பது என்ன? பயங்கரவாதத்துக்கு வரையறைதான் என்ன? அதனை முதலில் வெளியே சொல்லுங்கள் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் பேசிய பேச்சுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசினார். இதற்காக சாட்டை துரைமுருகன் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஶ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியினருக்கு மிரட்டல் விடுத்தார் சாட்டை துரைமுருகன். இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. எல்லோரையும் சிரிக்க வைக்க காரணம் இதுதான்...சிரிச்சுகிட்டே அழவைத்த பிரியங்கா சீமான் தொட்டதால் தீட்டு முதலில் தக்கலையில் காமராஜர் சிலைக்கு சீமான் போட்ட மாலையை இளைஞர் காங்கிரசார் தூக்கி எறிந்தனர்.
பின்னர் காமராஜர் சிலையை கழுவி பாலபிஷேகம் செய்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், பிரிவினைவாதி சீமான் தொட்டதால் காமராஜர் சிலை தீட்டாகிவிட்டது. அதனால் பாலபிஷேகம் செய்து விளக்கம் கொடுத்தனர். கொந்தளித்த ஜோதிமணி இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தமது சமூக வலைதளப் பக்கங்களில் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் சாட்டை துரைமுருகன் பேசியதன் வீடியோவையும் பகிர்ந்து, இந்த பேச்சை கண்டிக்காதவர் சீமான்; சீமானின் தூண்டுதலில்தான் சாட்டை துரைமுருகன் இப்படி பேசினார்;
அதனால் சீமானையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். சீமானுக்கும் மிரட்டல் பின்னர் சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் சீமான் மீது ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி ஜோதிமணி எம்.பி, சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் புகார் மனு கொடுத்தனர். வடசென்னையில் சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி, சீமானின் நாக்கை அறுத்துவிடுவேன் என மிரட்டினார்.
இது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க - வேல்முருகன் அறிவுரை எது பயங்கரவாதம் என கேள்வி இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சீமான் சந்தித்து பேசினார். அப்போது, எது பயங்கரவாதம்? பயங்கரவாதம் என்பதற்கான வரையறைதான் என்ன? பயங்கரவாதம் குறித்த வரையறையை வகுத்து அதை முதலில் வெளியில் சொல்லுங்கள். அதன்பின்னர் எது எது தேசதுரோகம், பிரிவினைவாதம் என தெரிந்து கொள்ளலாம். சாட்டை துரைமுருகனை விரட்டி விரட்டி கைதுசெய்தீர்கள். ஆனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஹெச். ராஜாவை ஏன் ஒன்றுமே செய்யவில்லையே. உங்களுக்கு வசதியென்றால் விட்டுவிடுவீர்கள் அப்படித்தானே? என பதிலடி கொடுத்தார்.