முகேஷ் அம்பானி அடுத்த அதிரடி.. ஜெர்மன், டென்மார்க் நிறுவனத்தில் முதலீடு.
13 Oct,2021
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி துறையில் அதிகளவில் முதலீடு செய்து வரும் நிலையில் இத்துறையில் தனது வர்த்தகத்தை ஆரம்பம் முதலே
தற்போது ஜெர்மன், டென்மார்க் நாடுகளை சேர்ந்த இரு நிறுவனத்திள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீடு செய்து அதிகளவிலான பங்குகளை கைப்பற்றியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கிளை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் நிறுவனத்தின் மூலம் ஜெர்மனி நாட்டில் இருக்கும் கிரீன் சோலார் வேஃபர் தொழில்நுட்ப நிறுவனமான நெக்ஸ்வேஃப்-ல் முதலீடு செய்துள்ளது.
நெக்ஸ்வேஃப் நிறுவன நெக்ஸ்வேஃப் நிறுவனத்தின் சி சீரியஸ் பண்டிங் சுற்ரில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் ஆங்கர் முதலீட்டாளராக இருந்து சுமார் 25 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. இந்நிறுவனம் மோகிரிஸ்டலைன் சிலிக்கான் வேஃபர்-ஐ தயாரிக்கவும், வடவமைத்தும் வருகிறது. Stiesdal நிறுவனம் இதேபோல் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் நிறுவனத்தின் மூலம்
டென்மார்க் நாட்டை சேர்ந்த Stiesdal என்னும் நிறுவனத்துடன் ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்துள்ளது. Stiesdal நிறுவனம் ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் உற்பத்தி துறையில் இயங்கி வருகிறது. ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் Stiesdal கூட்டணி மூலம் இந்தியாவில் ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க உள்ளது. மேலும் Stiesdal ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உரிமையை ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் அளித்துள்ளது.
REC சோலார் ஞாயிற்றுக்கிழமை தான் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் நிறுவனம் நார்வே நாட்டில் இருக்கும் REC சோலார் மற்றம் இந்தியாவில் இருக்கும் ஸ்டெர்லிங் மற்றும் வில்சன் ஆகிய இரு நிறுவனங்களிலும் முதலீடு செய்து மொத்தமாக நிறுவனக்தை கைப்பற்றியுள்ளது. முகேஷ் அம்பானி இதன் மூலம் 3 நாட்களில் ரிலையன்ஸ் சுமார் 4 நிறுவனங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. கிரீன் எனர்ஜி துறையில் முகேஷ் அம்பானி 75,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது இத்துறை சார்ந்த பல நிறுவனங்களை அடுத்தடுத்து வாங்கி வருகிறார் முகேஷ் அம்பானி.