இந்தியாவில் விமான சேவை 20 சதவீதமாக குறைவு :
06 Oct,2021
கொரோனாவுக்கு முன் இருந்ததில் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே இந்தியாவில் விமான சேவை தற்போது இயக்கப்படுவதாக, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் அமெரிக்காவின்
பாஸ்டனில் நடந்தது. அதில் அமைப்பின் இயக்குனர் வில்லி வால்ஸ் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் விமானப் போக்குவரத்து துறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ல் மட்டும் 10.27 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது இழப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. வரும் 2023ம் ஆண்டில் இருந்து லாபத்தை எதிர்பார்க்கலாம்.இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இந்தியாவில் தற்போது தான், உள்நாட்டு விமான சேவை சற்று மேம்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு முன் இருந்ததில், தற்போது 20 சதவீதம் விமான சேவை மட்டுமே இயக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்