இனி சில வினாடிகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறலாம்
08 Aug,2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கோவின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில், தடுப்பூசி சான்றிதழ் பெறுவதை எளிதாக்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்ட ஒருசில வினாடிகளில் வாட்ஸ் அப்பில் சான்றிதழ் பெற முடியும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
‘கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் பெற விரும்புவோர், +91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணில் 'கோவிட் சர்டிஃபிகேட்' என அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் ஓடிபி-ஐ பதிவு செய்தவுடன் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது