டெல்லியை உலுக்கிய கற்பழிப்பு சம்பவம்: முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
06 Aug,2021
சிறுமியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் டெல்லி உள்பட நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலுக்கிய இந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் அறிவித்தார்.