தமிழகத்தில் 144 தடைஅரசு அதிரடி உத்தரவு!!
03 Aug,2021
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகள் ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரை 144 தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அரும்பாவூர் பேரூராட்சியில் 2 பகுதிகள், லப்பைக்குடிகாடு பேரூராட்சி பிரதான கடை வீதிக்கும் 144 தடை பிறப்பித்துள்ளது. தடை பகுதியில் பால், காய்கறி கடைகள் தவிர பிற கடைகள் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என கூறியுள்ளது.