மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு.. சென்னையில் தொற்று அதிவேகம்!
31 Jul,2021
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது கவலையை எற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எவ்வளவு? இதனால் மொத்த பாதிப்பு 25,57,611 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். திண்டுகல்லில் 3 பேர் இறந்துள்ளனர சென்னையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,050 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,193 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,02,627 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. சென்னை நிலை என்ன? 20,934 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 1,56,843 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,64,12,705 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 215 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு அதிகரித்துள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கிட்டத்தட்ட 19 மாவட்டங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோட்டில் ஆதிக்கம் கோவையில் மட்டும் 230 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் 109 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 43 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 32பேருக்கும், திருவள்ளூரில் 85 பேருக்கும், திருச்சியில் 85 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 71 பேருக்கும், விருதுநகரில் 12 பேருக்கும், ஈரோட்டில் 171 பேருக்கும், சேலத்தில் 84 பேருக்கும், நாமக்கல்லில் 74 பேருக்கும், தஞ்சாவூரில் 105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.