ஸ்ரீலங்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா?
25 Jul,2021
இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல்வாதிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் சீன ஆட்சியாளர்களுடன் நடத்தும் இரகசிய பேச்சுவார்த்தைகளை இந்தியா கண்காணித்து வருகின்றது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நாட்டின் தயாரிப்பான பெகாசஸ் என்ற மென்பொருள் ஊடாக இந்திய இந்த கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டம் சம்பந்தமாக அரசாங்கம் மற்றும் அமைச்சரவை எடுக்கும் முக்கிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை இந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளமதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் எதிர்க்கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்லாது இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் அலைபேசிகள் கூட இந்த மென்பொருள் ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
இது இந்திய அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய ஆளும் கட்சிக்குள்ளும் சர்ச்சைகள் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.