தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
24 Jul,2021
திமுக வெற்றிபெற்றதும் சுதீஷிடமும், விஜயபிரபாகரனிடமும் விஜயகாந்த் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்றதும் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
விஜயகாந்த். அதைத் தொடர்ந்து நேரடியாக தனது மகனுடன் விஜயகாந்த் வீட்டிற்கே சென்று விஜயகாந்த் பற்றி நலம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விசாரித்தார் .
அப்போது உங்கள் கட்சியை தான் அழிக்க விரும்பவில்லை என்று கூறிய ஸ்டாலின். உங்கள் உடல்நலமும், கட்சியும் முன்பு போல புது பொலிவுடன் வரவேண்டும் என்று கூறியவர், உங்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியை கொடுக்கிறேன் என்று கூறி விஜயகாந்தை திகைக்கவைத்தார் மு.க.ஸ்டாலின்.
அதோடு, உங்கள் கட்சியில் இவருக்கு தான் எம்.பி பதவி கொடுக்கிறேன் என்று நான் சொல்லமாட்டேன். உங்கள் கட்சியில் நீங்கள் விரும்பும் நபருக்கே அதை கொடுக்கிறேன் என்று கூறியவர், நீங்கள் விவாதித்து சொல்லுங்கள், அவரையே மாநிலங்களவை எம்.பி ஆக்குகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார்.
இது விஜயகாந்துக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்க இது பற்றி தன் குடும்பத்தினரோடு விதித்துள்ளார். விஜயகாந்தின் முதல் விருப்பமாக இருந்தது பிரேமலதா விஜயகாந்த் தான் என்றாலும், தன் உடல்நிலையை பார்த்துக்கொள்ள அவர் வேண்டும், அவர் டெல்லி சென்றால் அது சரியாக இருக்காது என்று முடிவெடுத்துள்ளார்.
அடுத்ததாக தன் மகன் விஜயபிரபாகரன் தான் தற்போது கட்சியில் அடுத்த தலைவராக உருப்பெற்று வருகிறார். ஆகவே அவர் இங்கு இருந்தால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று நினைத்து பிரேமலதாவின் தம்பியும் தேமுதிகவின் துணைச் செயலாளருமான எல்.கே.சுதீசை மாநிலங்களவை எம்.பி ஆக்கலாம் என்று விஜயகாந்த் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்ததும் எது எப்படியோ தனக்கு பதவி கிடைத்தது மகிழ்ச்சி என்று ஏக மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தேமுதிக சுதீஷ்.