எதிரி நாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!
22 Jul,2021
எதிரி நாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கவல்ல, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதித்துப் பார்க்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ ஆராய்ச்சிமற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிரி நாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வகையிலானஏவுகணைகளை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அதன்படி, இலகு ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளானது தாமாகவே சென்று பீரங்கிகளை அழிக்கக்கூடியவை ஆகும்.
இந்நிலையில், இந்த ஏவுகணை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, குறிப்பிட்ட தொலைவில் வைக்கப்பட்டிருந்த மாதிரிபீரங்கியை, இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து, ராணுவத்தில் இந்த ஏவுகணைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.