ராஜீவ் காந்தி கொலை வழக்கு சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
19 Jul,2021
ராஜீவ் காந்தியின் கொடூரமான படுகொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது என சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தயார் செய்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் வெளியான தகவலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பொன்றை தயார் செய்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் டெல்லிக்கு விஜயம் செய்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போதே சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தயார் செய்த குறிப்பில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல என குறிப்பிடப்பட்டிருப்பதை தமிழக ஆளுநருக்கு தெரிவியப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறையில் இருப்பவர்களுகளில் சிலருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது. எனவே இவர்கள் பரோலில் வேண்டுமானால் சில காலம் வெளியே இருக்கலாம் எனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.