தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இளைஞர் பரிதாப பலி!
04 Jul,2021
கொரோனா வைரஸ் அதிகரித்த நிலையில், பலரையும் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால், மக்கள் பலரும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், அவரது உடற்கூராய்வு நடந்து முடிந்த பின்னரே, இறப்பிற்கான சரியான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்தவர். 29 வயதான அந்த இளைஞர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இதையடுத்து, அவரும் அவரது மனைவியும் இரண்டு மணியளவில் சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
வழக்கமான செயல்முறையின் படி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, தடுப்பூசி மையத்தில் அவர்கள் சில நேரம் காத்திருந்தனர். அப்போது அவருக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை...
அதன்பின்னர் அவர் கழிப்பறைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவர் உடனைடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே, வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர்...
மேலும், அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்றும், வேறு எந்த இணை நோய்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆறு மாதங்களாக சர்க்கரை நோய்க்கான எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.