பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை!
30 Jun,2021
ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பாரிஸ் மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து சென்னைக்கு நேரடி விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத் தலைநகரான சென்னை, Air France விமான நிறுவனத்தின் 4-வது இந்திய நுழைவாயிலாகச் செயல்பட உள்ளது.
ஏர் பிரான்ஸ் (Air France) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பாரிலிருந்து 111 பயணிகளுடன் ஜூன் 26-ஆம் திகதி காலை புறப்பட்டு, நேற்று (27 ஜூன்) அதிகாலை சென்னை வந்தது.
அதனையடுத்து, இன்று அதிகாலை 01.20 மணிக்கு சென்னையில் இருந்து மீண்டும் அந்த விமானம் பாரிஸ் புறப்பட்டது.
கிருமித்தொற்றுச் சூழல் காரணமாக, சென்ற ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறவிருந்த அந்த ஏற்பாடு, இரு முறை தள்ளிவைக்கப்பட்ட பின் இவ்வாண்டு செயல்படுத்தப்படுகிறது.
Boeing 787-9 ரக AF108 விமானம், சுமார் 10 மணி நேரம் பறந்து, சென்னைக்கு வரும். இந்த விமானத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன; அவற்றில் 276 பேர் அமரலாம்.
அடுத்த மாதத்திலிருந்து (ஜூலை 8 முதல்) ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பாரிஸை நோக்கி விமானம் புறப்படும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும், பாரிஸிலிருந்து சென்னையை நோக்கி விமானம் புறப்படும்.
இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, ஏர் பிரான்ஸ் வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கும் என கூறப்பட்டுள்ளது.