ஜூலை 1 முதல் மேலும் சில கட்டணங்கள்: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ வங்கி
07 Jun,2021
!
இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்ரில் ஜூலை 1ம் தேதியில் இருந்து வங்கியில் பணம் எடுப்பது, ஏடிஎம் பரிவர்த்தனை போன்ற சேவைகளுக்கு கட்டணங்களை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது,
எஸ்பிஐ வங்கியில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கட்டண மாற்றம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஒரு மாதத்தில் 4 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதற்குரிய ஜிஎஸ்டி கட்டணமும் வாடிக்கையாளர் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
அதேபோல் ஏடிஎம்களில் பணம் எடுத்தாலும் இதே போன்ற கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ ஏடிஎம் ஆக இருந்தாலும் வேறு வங்கிகளின் ஏ.டி.எம் ஆக இருந்தாலும் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் வாடிக்கையாளர்கள் 10 லீஃப் வரை உள்ள செக்புக் பரிவர்த்தனை கட்டணம் இல்லை என்றும் அதனை தாண்டினால் 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதே போல் 25 லீஃப் தாண்டினால் 75 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அதற்குரிய ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த சேவை கட்டணம் அனைத்திலும் மூத்த குடிமக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வருவதாக தெரிவித்துள்ளது. எஸ்பிஐ-ன் இந்த அறிவிப்பால் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.