தமிழகத்தில் 7 முதல் 14 ஆம் தேதி காலை வரை தளர்வுகளோடு ஊரடங்கு நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது . கோவை , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் தொற்று குறையாததால் , அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
11 மாவட்டங்களில் மளிகை , பல சரக்கு காய்கறி கடைகள் , மீன் கடைகள் , நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 வரை செயல்படும் . மீன் சந்தைகளை திறந்த வெளியில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் . இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது .
மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வருவதால் 11 மாவட்டங்களில் அறிவித்த தளர்வுகளோடு , கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .
அரசு அலுவலங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் . மின் பணியாளர், பிளம்பர் , கம்யூட்டர் ரிப்பேர் செய்பவர் , தச்சர் ,மெக்கானிக்குகள் , ஹார்டுவேர் கடைகள் , ஸ்டேஷனரி கடைகள் , காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி.
கோவை , திருப்பூர் , சேலம் , கரூர் , ஈரோடு , நாமக்கல் , திருச்சி , மதுரையில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் , 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் . நடமாடும் மளிகை , காய்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும் .