சர்வதேச விமானங்களுக்கு தடை நீட்டிப்பு
29 May,2021
சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23 முதல், சர்வதேச விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனினும், கடந்த ஆண்டு மே மாதம் முதல், 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழும், ஜூலை முதல் ஒப்பந்தம் டிப்படையிலும், வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதன்படி அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூட்டான், பிரான்ஸ் உள்ளிட்ட, 27 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச விமானங்களுக்கான தடை, நாளை மறுநாளுடன் நிறைவடைய இருந்தது.
இந்நிலையில் அந்த தடையை, ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து, மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. எனினும், 'சர்வதேச சரக்கு விமானங்களும், சிறப்பு பயணியர் விமானங்களும் தொடர்ந்து இயங்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.