ஜூன் 1-ந் தேதி முதல்v உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு - விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு
29 May,2021
கொரோனா 2-வது அலை காரணமாக விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உள்நாட்டு விமான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதேநேரம் அதிகபட்ச வரையறையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த கட்டண அதிகரிப்பின் மூலம் 40 நிமிடத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்துக்கான கட்டணம் ரூ.2,300-ல் இருந்து ரூ.2,600 ஆக அதிகரிக்கும் என அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.