மாணவிகளுக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியர்: நடவடிக்கை எடுக்குமாறு சீமான் வலியுறுத்தல்!
24 May,2021
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். கே.கே.நகரில் இயங்கி வரும் பி.எஸ்.பி.பி. என்ற தனியார் பள்ளியில் 20 ஆண்டுகளாக வணிகவியல் ஆசிரியராக பணிபுரியும் ராஜகோபாலன் என்பவர், தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ராகஜோபாலன் அனுப்பிய மெசேஜ்களுடன் பள்ளி நிர்வாகத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்த புகார் தொடர்பில் பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சீமான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், சென்னை, கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் இராஜகோபாலன் என்பவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக எழுந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது.
அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரைக் காக்கும் மருத்துவமும் வணிகப் பண்டமாக மாறிப்போன குற்றச்சமூகத்தில் நடந்தேறும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையே வெட்கித் தலைகுனியச் செய்கிறது.
மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்த வேண்டிய ஆசிரியரே இழிவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்