இந்தியாவில் கருப்பு பூஞ்சை வைரஸ்- 50% பேர் இறக்கிறார்கள் இல்லை கண்களை
24 May,2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை சுமார் 8,800 பேருக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கம், வந்தால் 50 சதவிகிதம் இறக்க நேரிடும் இல்லையேல் தப்பிப் பிழைத்தால் நிச்சயம் ஒரு கண் போய் விடும் என்ற நிலை காணப்படுகிறது. மிகவும் அரிதாக உண்டாகும் இந்த மியூகோர்மைகோசிஸ் தொற்று பாதிப்பு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பல்லாயிரம் பேருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது. அது ஏன் என்பது இன்றுவரை புரியவில்லைஸ இது இவ்வாறு இருக்க.. இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் நபர்கள் ஊடாக ,,,
இன் நோய் வேறு நாடுகளுக்கும் பரவும் நிலை தோன்றியுள்ளது. கோவிட்௧9 தொற்றைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு (ஊக்க மருந்து) மருந்துகள் மற்றும் கருப்பு பூஞ்சை தாக்குதல் பாதிப்பு ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து கூடுதலாக உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 12 முதல் 18 நாட்களுக்குள் கருப்பு பூஞ்சை பாதிப்பு உண்டாவதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.
இதுவரை இந்தியாவில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானவர்கள் பாதிக்கும் அதிகமானவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்தவர்கள்.