தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணம் தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலக சுகாதார அமைப்பு, தற்போதுள்ள கொரோனா தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும் இது கட்டுப்படுத்தக் கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பொது சுகாதார திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரையும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும். இதற்கென 2021-22 நிதி ஆண்டில் 1030.77 கோடி ரூபாய் நிதி தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரிடர் காலத்தில் பொதுமக்களின் கோவிட்-19 சிகிச்சைக்கான செலவுகளை பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நிர்ணயம் செய்த தொகையை அரசு கனிவுடன் பரிசீலனை செய்து 14.05.2021 அன்று நடைபெற்ற உயர் மட்டக்குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தி குழுவின் பரிந்துரையின் பேரில் அரசு ஆணை எண்.1887 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை நாள்.17.05.2021-ன்கீழ் குறிப்பிட்டவாறு ஆணைகள் வழங்கியுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பின்படிஅதி-தீவிர, தீவிர, மற்றும் தீவிரமில்லாத தொற்றுள்ள அனைத்து கோவிட்-19 நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
தனியார் மருத்துவமனையில் தீவிரமில்லாத கோவிட்-19 சிகிச்சை பெறுவதற்கு நோயாளிகள் நேரடியாக உள்நோயாளியாக அனுமதிக்கப்படலாம்.
கொரோனா தொற்று மிகஅதிகமாக பரவிவரும் இந்தசூழலில் மக்கள் எவ்வித தொய்வுமின்றி உரியநேரத்தில் சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்களின் இன்னுயிர் காக்கப்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உயர்த்தி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தீவிரமில்லாத சிகிச்சைக்கு
1. தீவிரமல்லாத கோவிட் - 19 சிகிச்சைஆக்ஸிஜன் உதவி இல்லாமல்Non Critical care - without Oxygen Support ரூ.5000
2. தீவிரமல்லாதகோவிட் - 19 சிகிச்சைஆக்ஸிஜன்உதவியுடன்Non Critical care - Oxygen Support - ரூ.15000
3. தீவிரசிகிச்சை - வெண்டிலேட்டர்வசதியுடன்ICU with Invasive Ventilation - ரூ.35000
4. தீவிரசிகிச்சை - ஊடுருவா வெண்டிலேட்டர்வசதியுடன்ICU With Non-Invasive Ventilation - Bi-PAP / CPAP - ரூ.30000
5. தீவிரசிகிச்சை ஆக்ஸிஜன்உதவியுடன் - வென்டிலேட்டரிலிருந்து படிப்படியாக குறைப்பதற்கு ICU With O2 - Only as Stepping down - ரூ.25000
அதி-தீவிர சிகிச்சைக்கு முந்தைய ரூ.15000/-லிருந்து நாளொன்றிற்கு ரூ.35000/- ஆக அதிகரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஆய்வக பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்களின் சிகிச்சை கட்டணம் முழுதும் தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனைகளிலும் உடன் சிகிச்சை கிடைத்திட வழிவகை செய்யும்.மேலும் தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் இதர பொது மக்களுக்கும் சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைமுறை கட்டணம்
1. தீவிரமல்லாத கோவிட் - 19 சிகிச்சை ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் Non Critical care - without Oxygen Support ரூ.7500 மருத்துவமனைதரவரிசை A1 & A2 ரூ.5000 மருத்துவமனைதரவரிசை A3 to A6
2. தீவிரமல்லாத கோவிட் - 19 சிகிச்சை ஆக்ஸிஜன் உதவியுடன்Non Critical care - Oxygen Support ரூ.15000
3. தீவிரசிகிச்சை - வெண்டிலேட்டர் வசதியுடன்ICU with Invasive Ventilation ரூ.35000
4. தீவிரசிகிச்சை - ஊடுருவா வெண்டிலேட்டர் வசதியுடன்ICU With Non-Invasive Ventilation - Bi-PAP / CPAP ரூ.30000
5. தீவிரசிகிச்சை ஆக்ஸிஜன் உதவியுடன் - வென்டிலேட்டரிலிருந்து படிப்படியாக குறைப்பதற்குICU With O2 - Only as Stepping down ரூ.25000
தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெறுவது குறித்து பொதுமக்கள் 1800 425 3993 / 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 X 7 புகார்களை அளிக்கலாம்.
புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.