ஊரடங்கில் சில தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு
11 May,2021
தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ஒரு சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வணிகர்களையும் கோரிக்கையை அடுத்து கூடுதலாக சில தளர்வுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்கள் குறித்து பார்ப்போம்
காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
அனைத்துத் தொழில் நிறுவனங்களும் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு “சேவைமையம் 24 மணிநேரமும் செயல்படும் வகையில்அமைக்கப்படும். சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும். இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629-93496, 99629-93497.