கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று காலை முதல் (மே 6) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் எவை எல்லாம் இயங்கும். எவை எல்லாம் இயங்காது என்பது குறித்து இப்போது பார்ப்போம் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் பெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் 21,238 பேருக்கு தமிழகத்தில் தொற்று உறுதியானது. மேலும் 144 பேர் ஒரே நாளில் பலியாகினர். கொரோன வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருவதை மக்களுக்கு புரிய வைக்க பல்வேறு வகையில் அரசும் அரசு அதிகாரிகளும் போராடி வருகிறார்கள். ஆனால் இன்னமும் பலர் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவதும் இல்லை. இதனால் மக்கள் வெளியில் நடமாடுவதை தடை செய்து கொரோனாவை கட்டுப்படுத்தும் இக்கட்டான நிலை உருவாகி உள்ளது. அதற்காக தமிழத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி எவை இயங்கும்? எவை இயங்காது?
அனுமதியில்லை இன்று முதல் 20ம் தேதி வரை சென்னையில் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் மட்டுமே பயணிக்க அடையாள அட்டையை காட்டி பயணிக்க முடியும். இதேபோல் பயணியர் இரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 % இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய கடைகளுக்கு தடை அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள்,
கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை- பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் , காய்கறி கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 12 மணி வரை செயல்படலாம் தனியாக தெருக்களில், சாலைகளில் செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் எனினும் குளிர்சாதன வசதி இருந்தால் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பால் விநியோகம் தடையில்லை மளிகை,பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகளை தவிர வேறு எந்த கடைகளும் தமிழகத்தில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை திறக்க அனுமதி இல்லை. எனினும் மருந்தகங்கள், பால் விநியோகம்போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு தேநீர் கடைகள் 12 மணி வரை ஓட்டல்களில் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. விழாக்களுக்கு தடை உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை. நாடு முழுவதும் தடை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் மற்றும் பியூட்டி பார்ல்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிராமப்பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் இயங்க தடை விதிக்கப்பபட்டுளளது. எதற்கெல்லாம் அனுமதி அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம் / ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ,
டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதி அளிக்கப்படும். 2. அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் அனுமதிக்கப்படும். .ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்ற இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. .