பிரிட்டன்,சீனா நாடுகளில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் தமிழகம் வருகை
05 May,2021
பிரிட்டன், சீனா மற்றும் மலேஷியா நாடுகளில் இருந்து, கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் தயாரிக்கும் செறிவூட்டிகள், சரக்கு விமானங்களில் சென்னை வந்தன.
நாடு முழுதும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தவர் களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள், வெளிநாடுகளில் இருந்து, ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளான, ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளன.
இந்நிலையில், மலேஷியா, சீனா, பிரிட்டன் நாடுகளில் இருந்து, 41 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சரக்கு விமானங்களில், நேற்று முன்தினம் சென்னை வந்தன. அவசரகால பொருட்களாக வந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை, 30 நிமிடங்களில் பாதுகாப்பு சோதனைகளை முடித்து, சுங்கத்துறையினர், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.