முழுமையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், தற்போது நடைமுறையில் இருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு ஆகிய தடுப்பூசிகள், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி பார்முலாவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மனதர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் எப்போது கட்டுக்குள் வரும் என்பது பெரும் புதிராகவே உள்ளது. முழுமையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், தற்போது நடைமுறையில் இருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு ஆகிய தடுப்பூசிகள், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இந்த தடுப்பூசியை ஆஸ்டா ஜென்கா நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்தன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதால், பரவலாக தடுப்பூசி சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவும் போதுமான தடுப்பூசி கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி பேட்டனை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது குறித்து உலக பெரும் பணக்காரரும், தடுப்பூசி உற்பத்திக்காக 250 மில்லியன் டாலருக்கும் மேலாக முதலீடு செய்திருப்பவருமான பில்கேட்ஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் தடுப்பூசிக்கான பேட்டனை பகிர்ந்து கொள்வதில் விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.
நிபுணத்துவம் மற்றும் தடுப்பூசி உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு, டெக்னாலஜி ஆகியவை பற்றாக்குறையாக இருப்பதால், கொரோனா தடுப்பூசி பேட்டனை பகிர்ந்து கொள்வது தேவையற்றது எனத் தெரிவித்தார். இது அறிவுசார் சொத்துரிமை அல்ல என்றும், தங்களிடம் மட்டுமே தடுப்பூசியை உருவாக்குவதற்கான கட்டமைப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், வளரும் நாடுகளில் தடுப்பூசி உருவாக்குவதற்கான கட்டமைப்பு இல்லாத நிலையில், ஒரு நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பது என்பது சாத்தியமில்லை எனவும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
பில்கேட்ஸின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. உலக மக்கள் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் இந்த சூழலை பயன்படுத்தி, அவரது நிறுவனம் மற்றும் முதலீடுகள் மூலம் பெரும் பணத்தை சம்பாதிக்க முயன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்டா ஜென்கா நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிப்புக்காக, பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெரும் முதலீடு செய்திருப்பதாகவும், அவர்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூலம் தற்போது பில்கேட்ஸ் லாபம் ஈட்டி வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர். மேலும், வளரும் நாடுகளில் தடுப்பூசி உருவாக்கத்துக்கான கட்டமைப்பு இல்லை என்ற அவரது வாதத்தையும் பலர் நிராகரித்து வருகின்றனர். வளரும் நாடான இந்தியா, கொரோனா தடுப்பூசிக்கான டெக்னாலஜியை விரைவாக ஏற்படுத்தி, அதிக தடுப்பூசிகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதையும் பன்னாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.