தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்த வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு
04 May,2021
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுஊரடங்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் வழக்கறிஞர் பாலாஜிராம் பொது நல மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசியை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் பெரும்பாலானோருக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் 2 முதல் 5 % மக்கள் மட்டுமே எடுக்க வாய்ப்புள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தியை துவங்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். இதை தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வருகிறது.