நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கட்சி உறுப்பினர்களுக்கு சில நம்பிக்கையான தகவல்களை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிகத்தில் கடந்த 6-ஆம் திகதி நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தான் இந்த முறை ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு முன் மற்றும் பின் கூறி வருகின்றன.

இதனால் திமுகவில் அமைச்சரவைக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு பின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் உறுதியாக இருக்கிறாராம். இது குறித்து அவர் தன் தம்பிகள் என கூறப்படும் கட்சியை சேர்ந்த சிலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது.'
பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின்பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
முன் எப்போது காட்டிலும் மாபெரும் வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அளவிற்கு சீமானுக்கு எப்படி நம்பிக்கை வந்தது என்று கேட்ட போது, கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் அங்கிருக்கும் படித்த இளைஞர்கள் ஒரு 5 பேரிடம் கேட்டால், அதில் மெஜாரட்டியாக சீமானுக்கு என்று தான் கூறுகின்றனராம்.
இதன் அடிப்படையில் வைத்தே, சீமான் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும், தலைநகர் சென்னையில் கூட திராவிட கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொங்கு மண்டலம், தென் மண்டலம் என்று பரவலாக இளம் தலைமுறையினர் வாக்குகள் நாம் தமிழருக்கு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.