இந்தியாவில் 4 லட்சம் பேர் இறந்திருக்க கூடும்: ஆனால் 2 லட்சம் என்கிறது மோடி அரசு !
28 Apr,2021
இந்தியா இன்று விடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது. மிகவும் ஆபத்தான மற்றும் 3 முறை உருமாறிய அதுவும் காற்றில் 1 மணி நேரம் சஞ்சரிக்க கூடிய கொடிய கொரோனா இந்தியாவை தாக்க ஆரம்பித்துள்ளது. இந்திய அரசு அறிவித்துள்ள இந்த 2 லட்சம் என்பது பிழையான கணக்கு என்றும், இது இரட்டிப்பாக இருக்க கூடும் என்றும் வெளிநாட்டு செய்திச் சேவைகள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டு விட்டதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அளவு கணக்கு இன்றி பிணங்கள் எரிக்கப்பட்டு வரும் நிலையில். இந்தியாவின் மொத்த சுகாதார துறையும் ஆட்டம் கண்டு செயல் இழந்து நிற்கிறது. வைத்தியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது. ஏன் எனில் மோடி அரசு கிடைத்த தடுப்பூசிகளை வைத்தியர்களுக்கும் தாதி மார்களுக்கும் போடவில்லை. மாறாக செல்வந்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமே போட்டார்ஸ. இதனால் 2ம் அலை ஸ
அடிக்கும் இந்த வேளையில் நோயாளிகளை காப்பாற்றும் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ளார்கள். அங்கே ஆக்சிஜன் இல்லை. எல்லா மருத்துவமனைகளும் கதவுகளை மூடி விட்டது. ஆனால் பாருங்கள் தமிழ் நாட்டில் மற்றும் பிற மாநிலங்களில் டாஸ் மார்க் என்று சொல்லப்படும் சாரயக் கடைகள் இன்னும் திறந்து தான் இருக்கிறது. அங்கே மக்கள் வெள்ளம் அலை மோதிய வண்ணம் தான் உள்ளது.