தற்போதைய ஆட்சி நீடிக்கும்: 'பிலவ' பஞ்சாங்கம் கணிப்பு
14 Apr,2021
பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலன் சொல்லப்பட்டதில், தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக, பட்டாச்சாரியார்கள் கூறினர்.
யுகாதி பண்டிகையையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி, நேற்று பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலனை தெரிவித்தனர்.அதன் விபரம்:புத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளதால், நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும்; பயிர்கள் செழித்து வளர்ந்து,நல்ல மகசூல் கிடைக்கும்; விவசாயிகள் ஏற்றம் பெறுவர்; புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி, தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளது.
கடந்தாண்டை போன்று, நடப்பாண்டும் புதுப்புது, 'வைரஸ்'உருவாகும்; கால்நடைகளுக்கும் வியாதிகள்ஏற்படும்; மருத்துவதுறையில் பல சாதனைகள் ஏற்பட்டு, வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள்கிடைக்கும்.கல்வி துறையில், உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும்; அண்டை நாடுகளின் போர் முயற்சி முறியடிக்கப்படும்; இந்தாண்டில், 12 புயல்கள் உருவாகும்.இவற்றில் ஒன்பது, இந்தியாவை சுற்றி தாக்கும்; புயல் வெள்ளத்தால், சென்னை மிதக்கும்.இப்படி கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள்கூறினர்.