திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி கொரோனா தொற்று காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்ததை ஒட்டி மீண்டும் ஜூன் 1-ந்தேதி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். பின்னர் ரூ.300 டிக்கெட்டுடன் இலவச தரிசனம் உட்பட தினமும் 40 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனா தோற்று 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டிலும் பக்தர்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.நேரத்தில் மேலும் 50,678 பேருக்கு கொரோனா