எந்த பொத்தானை அழுத்தினாலும்.. "தாமரை" சின்னத்தில் விழுந்த ஓட்டு.
07 Apr,2021
விருதுநகரில் உள்ள ஒரு வாக்கு பதிவு மையத்தில் எந்த சின்னத்தின் பொத்தானை அழுத்தினாலும், பாஜகவின் தாமரை சின்னத்தில் விளக்கு எரிவதாக வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுக்க வாக்குப்பதிவு ஜோராக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெயிலையும், பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவிநாசி பகுதியில் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால் இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்தது . இதையடுத்து அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரம் பரிசோதிக்கப்பட்டது. எந்த சின்னத்தை அழுத்தினாலும் தாமரை இன்னொரு பக்கம், விருதுநகர் சத்ரிய பள்ளி வாக்குச் சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவாகுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக வாக்காளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இயந்திரம் பரிசோதனை உடனடியாக, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை பரிசோதிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எனவே வாக்களிக்க வந்த வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் காத்து இருக்கிறார்கள். மேற்கூரை இடிந்தது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் சமுதாய கூடம் ஒன்றில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வாக்குச் சாவடி மேற்கூரை இடிந்து விழுந்ததில் வாக்களிக்க வந்திருந்தவர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு பக்கம் வாக்குப்பதிவு இந்திரங்களில் கோளாறு,
இன்னொரு பக்கம் வாக்குச்சாவடி மையம் பழுதடைந்து இருந்தது, உள்ளிட்டவை வாக்காளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. சுமூகமான ஓட்டுப் பதிவு இவ்வாறு ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக புகார்கள் எழுந்த போதிலும், பிற பகுதிகளில் வாக்குபதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் பரவல் காரணம் என்பதால், அதற்குரிய வழிமுறைகளுடன் வாக்குப் பதிவு செய்ய வாக்காளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
தேர்தல் ஆணையம் விளக்கம் இந்த நிலையில் சின்னம் மாறி ஓட்டு விழுவதாக வந்த குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், சின்னம் மாறி வாக்கு விழுவது தொடர்பாக புகார் வரவில்லை. நாங்கள் விசாரித்த வரை அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை. இவிஎம்மில் எந்த சின்னத்தை அழுத்துகிறீர்களோ அங்குதான் ஓட்டு விழும். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தது. அனைத்தும் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்றார்.