இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,446- பேருக்கு
02 Apr,2021
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலை மாறியது. ஒரே நாளில் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால் 30-ந்தேதியும், 31-ந்தேதியும் தொடர்ந்து 2 நாட்களாக கொரோனா பரவல் இறங்குமுகம் கண்டது. நேற்று முன்தினம் பாதிப்பு அதிரடியாக 56 ஆயிரத்து 211 ஆக குறைந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் 72 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், இதை எல்லாம் மிஞ்சும் வகையில் இன்று ஒருநாள் பாதிப்பு 81,446- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 469- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 50 ஆயிரத்து 356-பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தத் தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இப்படி எகிறி இருப்பது அதிர வைப்பதாக அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் 11-ந்தேதிக்கு பிறகு இதுவே அதிகபட்ச பாதிப்பு என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,23,03,131- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,15,25,039- ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 696-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 396- ஆக உள்ளது.