இலங்கை கடற்படையால் கைதான 54 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
27 Mar,2021
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை் 54 பேரை இலங்கை அரசு விடுவித்தது.
கடந்த புதனன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் 54 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் அவர்கள் கைப்பற்றினர். இச்சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைதான மீனவர்கள் அனைவரையும் இலங்கை அரசு அவர்களுடைய படகுகளுடன் இன்று விடுவித்தது.
கைது செய்யப்பட்ட 54 பேர்களில் 20 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 பேரும் தங்கள் படகுகளுடன் சொந்த வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது