"நான் முதலமைச்சரானால் இந்தியாவுக்கு இது தான் கதி" - சீமான் எச்சரிக்கை!
24 Mar,2021
நான் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் இந்தியாவை புறகணிப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக நடந்த வாக்கெடுப்பை இந்திய புறகணித்தது குறித்து கருத்து தெரிவித்த சீமான், நான் முதலமைச்சரானால் இந்தியாவை புறகணிப்பேன். இந்தியாவை உருவாக்கியது ஆங்கிலேயர்கள், ஆனால் அதற்கு முன்பு கோட்டை கட்டி கொடி வச்சு ஆண்ட பெரும் தமிழ்மக்கள் நாங்கள்.

எங்கள் இனத்தை அழித்து ஒழிக்கும் சிங்களவர்களை நட்பு நாடு என்ற ஆதரவாக நிற்கிறது இந்தியா.
சிங்களவர்கள் 1.25 கோடி, தமிழர்கள் நாங்கள் 13 கோடி பேர், யார் வேண்டும் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என கூறினால் இந்திய அரசாங்கம் என்ன செய்யும்?
நான் முதல்வராக இருந்தால், என் இனத்தின் வரலாற்று பகைவன் உனக்கு நண்பன் என்றால், நான் (தமிழ்நாடு) உனக்கு (இந்தியா) நண்பனா? பகைவனா? சொல் என சட்டசபையில் சட்டம் இயற்றினால் என்ன செய்வார்கள்?
நான் முதல்வராகிவிட்டால், ஐ.நா-வில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இந்தியாவை பேச வைப்பேன், பேசி தான் ஆக வேண்டும் என சீமான் கூறினார்.
ஐ.நா சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக சீனா வாக்களித்தது குறித்த கருத்து தெரிவித்த சீமான், சீனா இலங்கைக்கு ஆதரிப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை, ஏனென்றால் இலங்கையே சீனாவுடையது தான்.
இலங்கை சீனாவின் ஒரு மாகாணம். இப்போது சீனாவின் பிடியில் முழு இலங்கையும் இருக்கிறது, அதை இந்தியா மறுக்குமா? சீனா இலங்கையை முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்து விழுங்கிவிட்டது.
இலங்கையில் சீனா கடற்படை தளம் அமைப்பதற்கு மும்முரமாக வேலை நடக்கிறது, நாங்கள் ஒவ்வொரு நொடியும் அதை கவனித்து வருகிறோம். பேராபத்தை நோக்கி இலங்கை முடிவெடுத்துவிட்டது என சீமான் தெரிவித்துள்ளார்.