மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் இன்று ஆலோசனை
20 Mar,2021
நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (மார்ச்17) ஆலோசனை நடத்த உள்ளார்.
மஹாராஷ்டிராவை போலவே தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், டில்லி, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி பணி நிலவரங்கள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.