மஹாராஷ்டிராவில், கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால், 'திரையரங்குகளில், 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
¨
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமூக இடைவெளிஇங்கு, கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த, புதிய கட்டுப்பாடுகளை மஹாராஷ்டிர அரசு விதித்து உள்ளது. அதன்படி, திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகளுடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து இயங்க வேண்டும்.
சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய துறைகள் தவிர்த்து, அனைத்து தனியார் அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும். 'ஷிப்ட்'அரசு துறை தலைவர்கள், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, அலுவலக ஊழியர்களின் வருகை குறித்து முடிவெடுக்கலாம். தயாரிப்பு துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும், முழு தொழிலாளர்களுடன் இயங்க வேண்டும். அவை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, மூன்று, 'ஷிப்ட்'களில் இயங்கலாம். அரசின் பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள், கொரோனா தாக்கம் குறையும் வரை மூடப்படும். புதிய கட்டுப்பாடுகள், வரும், 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என, அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாபிலும் அமல்பஞ்சாபில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள, லுாதியானா, பாட்டியாலா உள்ளிட்ட, 11 மாவட்டங்களில், இரவு, 9:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் நாளை முதல், இம்மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லுாரிகள் தவிர, அனைத்து கல்வி மையங்களையும், வரும், 31ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில், 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 'மால்'களில், 100 பேருக்கு மேல் கூடக் கூடாது. திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. ஞாயிற்றுக் கிழமைகளில், திரையரங்குகள், உணவகங்கள், மால்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.