ஈரான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்
12 Mar,2021
இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கனடா உள்ளிட்ட நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
மேலும் பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் ஈரான் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பில் மொத்தம் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஈரானுக்கு வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய 3.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் ஈரானை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.