ராணுவ தளவாடங்களை தயாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி
12 Mar,2021
இந்தியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதுடன், தளவாடங்களை தயாரிக்கவும் உதவுவோம்' என, அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' தெரிவித்துள்ளது.
அமெரிக்க எம்.பி.,க்கள் அடங்கிய, ராணுவ சேவை குழுவினரிடயே, பென்டகன் உயர் அதிகாரி டேவிட் ஹெல்வி கூறியதாவது:இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்த, அதிபர் ஜோ பைடன் அரசு, ஆர்வமாக உள்ளது.இந்தியாவுக்கு, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதுடன், தளவாடங்களை, தானே தயாரிக்கவும், இந்தியாவுக்கு, அமெரிக்கா உதவி வருகிறது.
லடாக் எல்லையில், இந்தியா - சீனா இடையே, கடந்த ஆண்டு பதற்றம் ஏற்பட்டது. அப்போது, இந்தியாவுக்கு, அமெரிக்கா, பல உதவிகளை செய்தது. கடும் குளிரை எதிர்கொள்வதற்கான ஆடைகள், முக்கிய தொழில்நுட்ப பொருட்கள் ஆகியவற்றை, இந்தியாவுக்கு, அமெரிக்கா வழங்கியது. இரு நாடுகளும், கடந்த சில ஆண்டுகளாக, கடல்சார் கூட்டு நடவடிக்கையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்தியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அமெரிக்கா துணை நிற்கும்.இவ்வாறு அவர் பேசினார்.