சீமான் மீது வழக்குப்பதிவு!
12 Mar,2021
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை ஆதாரித்து தினமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு வேட்பாளரான சஞ்சீவிநாதனை ஆதரித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறைப்படி இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் பிரசாரத்துக்கு சிறித்து தாமதமாக வந்த சீமான் 10 மணியை தாண்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அதனால், தேர்தல் விதிமுறையை மீறி 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த சீமான் மீது செங்கல்பட்டு பொலிசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.