'விசா' தாமதம்: பெண்கள் புகார்
10 Mar,2021
:அமெரிக்க குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினருக்கு 'எச் - 1பி' வழங்கப்படுகிறது. இந்த விசா வைத்துள்ளவர்களின் மனைவி அல்லது கணவருக்கு 'எச் 4' விசா வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி இந்திய பெண்கள் பலர் அமெரிக்க நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். டிரம்ப் அதிபரானதும் இதற்கு தடை விதித்தார். இந்த தடையை தற்போதைய அதிபர் ஜோ பைடன் நீக்கியுள்ளார்.இந்நிலையில் 'எச் 4' விசா வழங்குவதிலும் புதுப்பிப்பதிலும் மிகவும் காலதாமதமாவதாக அமெரிக்காவில் உள்ள இந்திய பெண்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.